நீ கொடுத்த உயிரைக் கூட
பிரசவித்து விடுவேன்
மடியில்!
உன்னை மனதினின்று
பிரசவித்தால்மரணித்து விடுவேன்
நொடியில்!
நீ கொடுத்த உயிரோ
என் உள் துடிக்க...
என் உயிரோ
உன் உள் துடிக்கிறது!
நீ நானாக
நான் நீயாக
உனக்கான என் காதல்
நம் குழந்தை!
நீ தானோ
என்னுள்ளே நகலாய்??
உன் வாசம்
என் மூச்சில் தெரிகையில்!
பின்குறிப்பு:
சும்மா கவிதை எழுத முயற்சி பண்ணினப்போ கிறுக்கினது... இப்போ இங்க... பாவம் தான் நீங்க... பிளீஸ் யாரும் கல்லலால அடிச்சிடாதீங்க... கவிஞர்கள் நோ நோ இது நீங்க படிக்க வேண்டிய பக்கம் இல்ல! :)
12 comments:
beautiful.
இதற்கு என்ன குறைச்சல்? நன்றாகத்தான் இருக்கிறது, மற்றவருக்கு புரியற மாதிரி எழுதுவதுதான் படைப்பு. இல்லை என்றால் அது "coding".
Thank u sam :-)
நன்றி ஜோதி! :-)
கவுஜக்கு ஒரு விளக்கமே கொடுத்துவிட்டீர்கள்..
அழகாயிருக்கிறது கவிதையும் படமும்! :-)
நன்றி முல்லை! :-)
this is not bad.....
\\இதற்கு என்ன குறைச்சல்? நன்றாகத்தான் இருக்கிறது, மற்றவருக்கு புரியற மாதிரி எழுதுவதுதான் படைப்பு. இல்லை என்றால் அது "coding".\\
i go with jothi.........
:))
நன்றி அன்புடன் வாலு! :)
நல்லாத்தானே போய்க்கிட்டிருந்துது
ஏன் திடீர்னு.....
சும்மா
நெஜமாகவே கவிதை நல்லா இருக்கு
முதல் வரிகள் டாப்
நன்றி அமித்து அம்மா!
சும்மா ஒரு டெர்ரர்கு தான்! :-)
கவிதை நல்லாயிருக்கு.. தொடர்ந்து எழுதுங்க.....
அப்புறம் என்னோட குடிலுக்கு வருகை தந்ததற்கு நன்றி.....
நன்றி ரதி செல்வன்... :)
Post a Comment