May 26, 2009

மே மாதமும் இன்றைய குழந்தைகளும் நேற்றைய நானும்

இந்த மே மாதம் என்றாலே குழந்தைகளுக்குக் கொண்டாட்டம் தான்!
பெரியவர்களானதும் தான் ஸ்ஸ்ஸ் அப்பா இந்த வெயில் தொல்லை தாங்கலீயே அப்படினு அக்கடானு ஒரு இடத்துலயே அடைந்து கிடப்பது எல்லாம் துவங்கிவிடும்!

ஆனால் சிறு பிள்ளை பருவத்தில் வெயிலாவது ஒன்னாவது... இப்படி ஒரு அருமையான நேரம் மீண்டும் கிடைக்க எவ்வலவு நாள் காத்திருக்க வேண்டும் என்று எந்த கவலையும் இன்றி, பசி, உறக்கம் கூட இன்றி எப்படியெல்லாம் விளையாடி இருப்போம் நாம்!

இப்போ ஏன் இந்த மொக்கைனு நீங்க கேட்க வருவது புரியுது... என்ன செய்ய நாள்தோறும் வீதியெங்கும் சிதறி ஓடி ஆடி விளையாடும் குழந்தைகளைப் பார்க்கும் போது மனதிற்குள் இந்த கொசுவர்த்தி சுருளும் ஒரு பெருமூச்சும் (சத்தியமா பொறாமை இல்லீங்கோ) வந்து போகிறது!

முதலில் எல்லாம் தேர்வு அட்டவணை வந்ததுமே படிப்பதற்கு அட்டவணை போடுவதோடு, பல புதிய விளையாட்டுகளையும் எழுதி வைத்துக் கொள்வோம்... விடுமுறை நாளை எதிர் நோக்கி :)

பொதுவாக ஓடிப் பிடித்து விளையாடுவது, ஐஸ் பாய்ஸ், கண்ணாமூச்சி, நாடு பிடித்தல், ஓடும் போட்டி, நொண்டி, முயல் ஓட்டப் போட்டி என்று பல விளையாட்டுகள் வெளியில் சென்று விளையாடுவோம்! அப்பா அப்போதெல்லாம் எவ்வளவு விழுப்புண்கள், வீரத் தழும்புகள் :))))) இப்போ நினைத்தால் சிரிப்புதான் வருகிறது!

இந்த வெயில்ல நாம ஆடுறத பார்த்து அம்மாஸ் எல்லாம் கவலை பட்டு கேரம், செஸ், பல்லாங்குழினு வாங்கிக் குடுத்து எங்க எல்லாரையும் மதியம் மட்டும் ரொம்ப சிரமப் பட்டு வீட்டுக்குள்ள அடைச்சாங்க! அப்பவும் அடங்குவோமா? ம்ஹும்...

சமையலறைல கண்ணுல கையில சிக்கினதையும், வெளியில் இருக்கும் செடி, பாதம் கொட்டை எல்லாத்தையும் பொறுக்கி சோறு சமைக்கிறேன் பேர்வழினு வீட்டையே மண், செடி குப்பையாக்கு சமைச்சு வெச்சிருப்போம்... அப்பா அலுவலகம் முடிந்து வந்ததும் அதை குடுக்குறதுல ஒரு மகிழ்ச்சி எனக்கும் அப்பாவுக்கும்! :)

மறுபடியும் வெளியே தான் ஆட்டம்... இப்படியா போயிக்கிட்டிருந்த வாழ்க்கைல திடீர்னு ஒரு மாற்றம்... படிப்பு சுமையும் வயதும் ஏற துவங்கியாச்சு... :((( இப்படியெல்லாம் விளையாட அதிக நேரம் கிடைப்பது இல்லை மே மாதத்தில் கூட... இந்தி வகுப்பு, நடன வகுப்பு, யோகா அப்படி இப்படினு நாட்களை நிரப்பிடுவோம்! அப்படியே நேரம் கிடைச்சாலும் முன்ன மாதிரி ஓடி விளையாட கூச்சமா இருக்கும் அதுனால பூப்பந்து ஆட்டம் தான் விளையாடுவோம்... பதின்ம வயது பெண்(குழந்தைகள்) எல்லாரும் சேர்ந்து இரவு 8மணிக்கு விளையாட வருவோம் ஒரு 9மணி வரைக்கும் விளையாடுவோம்...

இப்படியா போகும் மே மாதங்களில் பெரும்பாலும் இந்த சுற்றுலாவும் இருக்கும் நான் 9வது வகுப்பு வரும் வரை... அதுவும் மகிழ்ச்சி நிறைந்த ஒன்றாகவே அமையும் :)))) அதன் பிறகு சுற்றுலா கனவிற்கும் பள்ளி ஆப்படித்தது மே மாதத்தில் கூட :(((

கல்லூரி நாட்களில் எப்படி தான் மே மாதம் போனதோ தெரியலை! ஆனால் முதுநிலை கல்வி படிக்கிறப்போ சென்னைல கல்லூரி விடுதில நல்லா விளையாடுவோம்... எங்கள் விடுதியில் எல்லாருமே பெண்கள் எங்களுக்குனு தனி மைதானம், பூப்பந்தாட்ட ஆடுகளம், கிரிக்கெட் ஆடுகளம்(யாருக்கும் ஒழுங்கா விளையாடத் தெரியாதுன்ற உண்மைய எப்படி உங்க கிட்ட சொல்றது!), மேசைப் பந்து, கால் பந்து, கூடைப் பந்து என்று எல்லாவற்றிற்கும் தனி ஆடுகளம்... அதனால் எங்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்!

அதிலும் இந்த பூப்பந்தும், கூடைப் பந்தும் மிகவும் பிடித்தமானது பெண்களுக்கு.... இந்த பூப்பந்தாட்ட வலை இருக்கே அதில் விளையாட்டோடு நிறைய செல்பேசி காதல் கதைகளும், திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்டோரின் ஜொள்ளு மொக்கைகளும் நிரம்பியிருக்கும்! :)))))

அங்கே தான் மீண்டும் எங்கள் குழந்தைப் பருவ விளையாட்டுகள் அரங்கேறின... :)))) அத்துணை விளையாட்டுகளையும் விளையாடினோம் கண்ணாமூச்சி தவிர!

ஆனால் அங்கே மே மாதத்தில் விளையாட முடியாது... கல்லூரி நாட்களில் தான் விளையாடுவோம்.... ஆக இந்த மே மாத கும்மி 9வது வகுப்போடு போனது... பின்னர் கொஞ்சம் 10ம் வகுப்பு முடிந்த மே மாதம் தலை தூக்கினாலும் பழைய நிலைக்கு வரவில்லை நாங்கள் :(

கல்லூரி விடுதியில் ஓரளவு பழைய மாதிரி விளையாடினாலும் குழந்தைப் பருவத்தில் விளையாடின முழுமையான நிறைவு போல அது இல்லை :(

பின்னர் வேலை, திருமணம், குழந்தை என்று வாழ்க்கை மாறிவிட்டது!
இனி பொழிலனின் மே மாதங்களை தான் அழகாக்க வேண்டும்!!! :)))

(ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா... இதச் சொல்லவா இவ்வளவு பெரிய மொக்கைனு நீங்க புலம்புறது கேக்குது... என்ன செய்ய ஏதோ தோணுச்சு எழுதிட்டேன் அவ்வ்வ்வ் யாரும் அடிக்காதீங்க என்னிய)

பின்குறிப்பு:
என் மனசாட்சி:
அப்பா இந்த கொசுக்கடி தொல்லை தாங்க முடியல எல்லாருக்கும்! அடங்கவே மாட்டியா?

இதைத் தொடர் பதிவாக்கலாமா?

( மனசாட்சி: நீ எழுதுனதெல்லாம் ஒரு பதிவுனு இதுல தொடர் வேறயா?)

இன்றைய குழந்தைகள் அனிமேஷன் உலகம், கார்ட்டூன் படங்கள், வீடியோ கேம் என்று வீட்டிற்குள்ளேயே அதிகம் முடங்கியிருப்பதாக தகவல் :( எல்லாக் குழந்தைகளையும் கூறவில்லை ஆனால் பெரும்பான்மையான குழந்தைகள்????

நம் அனுபவங்களை நாம் பகிர்ந்து கொள்வதன் மூலமும், படிப்பதன் மூலமும் பழைய நினைவுகள் மீண்டு நம் குழந்தைகளுக்கும் அப்படி விளையாடும் வாய்ப்பு கொடுப்போம் அல்லவா! அதற்காக தான் :)

இந்த மே மாத கொசுவர்த்தி சுருளைத் தொடர நான் அழைப்பது சில நட்சத்திர பதிவர்களைதான்!

*சித்திரக்கூடத்து சந்தனமுல்லை

*வானவில் வீதியில் வசிக்கும் கார்த்திக்

*எண்ணச் சிதறல்களை எழுத்துக்களாக்கும் வித்யா

எப்பவுமே உருப்படியாவே பதிவு எழுதிக்கிட்டு இருக்காங்க இவங்க எல்லாரும்... அதனால என் புண்ணியத்துல ஒரு மொக்கை பதிவு! அதையும் உருப்படியா எழுதி கலக்கிடுவாங்கல... :))))

15 comments:

jothi said...

இப்ப இருக்கிற பசங்களை வெளியில் போய் எங்கே விளையாடுகிறார்கள்? எல்லாம் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றன. வெயில் காலத்தில் பசங்களுடன் கிணற்றில் நீச்சல் அடிக்கும் சுகம் இருக்கிறதே,.. அப்பப்பா,.. ஒப்பிட முடியாதது. அது சரி நீங்கள் திருடன் போலீசெல்லாம் ஆட மாட்டீர்கள் போலிருக்கு,..

ஆகாய நதி said...

//
இப்ப இருக்கிற பசங்களை வெளியில் போய் எங்கே விளையாடுகிறார்கள்? எல்லாம் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றன.
//

உண்மை தான்... போதாக் குறைக்கு பிள்ளைகளை அறிவாளியாக்குறேன் பேர்வழினு புத்தகத்தைக் கொடுத்து அமுக்கு வைக்கின்றனர் வீட்டினுள் :(

//
அது சரி நீங்கள் திருடன் போலீசெல்லாம் ஆட மாட்டீர்கள் போலிருக்கு,..
//

ஆகா அதை மறந்துட்டேனே... அதுவும் சூப்பரா விளையாடுவோம் :)

நன்றி ஜோதி தங்கள் கருத்துக்கு....

சந்தனமுல்லை said...

நல்ல பதிவு ஆகாயநதி! சுவாரசியமா இருந்துச்சு! :-)

ஆகாய நதி said...

நன்றி முல்லை! :)

வித்யா said...

நன்றி ஆகாயநதி. ம்க்கும் நான் உருப்படியா எழுதறேனாக்கும். தமாஷ் பண்ணாதீங்க. முடிஞ்சா மே மாதத்திற்க்குள் எழுதுகிறேன்.

உங்கள் பதிவு பழைய நினைவுகளை கிளப்பிவிட்டுவிட்டது.

ஆகாய நதி said...

வாங்க வித்யா... :)நன்றி கருத்துக்கும் என் அழைப்பை ஏற்றமைக்கும்!

தீஷு said...

எங்கள் வீட்டின் அருகில் சில குழந்தைகள் விளையாடுவதைப் பார்க்க எனக்கும் என் பழைய நினைவுகள். அருமையான பதிவு.

ஆகாய நதி said...

நன்றி தீஷு அம்மா... :)))

Karthik said...

ஆஹா, செம ரகளையா இருக்கே!! :))

கண்டிப்பா சீக்கிரம் எழுதிடுறேன். நான் டேக் பண்ண ஒரு அப்பாவி இருக்கார். ;)

ஆகாய நதி said...

//
ஆஹா, செம ரகளையா இருக்கே!! :))

கண்டிப்பா சீக்கிரம் எழுதிடுறேன். நான் டேக் பண்ண ஒரு அப்பாவி இருக்கார். ;)

//

யாருப்பா இது... காணாம போனவங்க கிடைச்சாச்சா???

ஓ நம்ம வானவில் வீதி...கார்த்திக்!!!

ஆகாய நதி said...

//
கண்டிப்பா சீக்கிரம் எழுதிடுறேன்
//

நன்றி கார்த்திக்... வேண்டுகோளை ஏற்றமைக்கு :)

ஆகாய நதி said...

//
நான் டேக் பண்ண ஒரு அப்பாவி இருக்கார். ;)

//

அவரு யாருனு எனக்கு புரிஞ்சு போச்சு... :))))

Karthik said...

//அவரு யாருனு எனக்கு புரிஞ்சு போச்சு... :))))

அவரேதான்! ;)

'என்னாங்கடா நடக்குது இங்க?' அப்படினு எதோ சத்தம் வருதுல? ;)

ஆகாய நதி said...

//
அவரேதான்! ;)
//
:))))

//
'என்னாங்கடா நடக்குது இங்க?' அப்படினு எதோ சத்தம் வருதுல? ;)
//

ஆமா ஆமா!:)

Karthik said...

ஒரு வழியா எழுதி முடிச்சிருக்கேன். வந்து பாருங்க.