May 30, 2009

கொட்டும் பனி அருவியில் குட்டிப் பொழிலன்பொழிலனின் முதல் மே மாதம்... அவனை இந்த வயதிற்கேற்றவாறு எங்காவதுக் கூட்டிச் செல்லலாம் என்று இந்த கொட்டும் பனி அருவி கண்காட்சிக்கு அழைத்து சென்றோம்!

எனக்கோ குட்டிமாவிற்கு குளுராமல் அவன் மகிழும் விதமாக அனைத்தும் அமையவேண்டுமே என்று ஒரே யோசனை... ஒரு வழியாக கண்காட்சியகத்திற்கு வந்தாச்சு... பொழிலன் போன்ற அதி முக்கிய நபர்களுக்கு மட்டும் நுழைவு இலவசம் :))))) 4அடிக்கு மேல் வளர்ந்த குழந்தைகளுக்கு நுழைவு சீட்டு கண்டிப்பாக வேண்டுமாம்... நான் அதைவிட ஒன்றரை அடி தான் கூட... ஆனால் விடலயே :(((( (மனசாட்சி: அடங்கு அடங்கு!)

ஒரு வழியா உள்ளே நுழைந்தா ஆஹா! என்னா குளுமை என்னா குளுமை!
தரையெல்லாம் பனிக்கட்டி, சுவரும் பனி.... ரொம்ப அருமை!
ஆங்காங்கே சில இடங்களில் பனி அருவி உள்ளது... அதிலிருந்து பனி மழை போல்... முடியல பொழிலனுக்கு ஒரே கொண்டாட்டம்... பனி அவன் தலையில் படாம மறைத்து ஒரு சில சாரல் துளிகளை மட்டுமே அவனிடம் போக அனுமதித்தேன்... இவனுக்கு ஒரே கொண்டாட்டம்... அப்படி ஒரு சிரிப்பு...

அங்கே ஆட்டமும் பாட்டமும் என ஒரு நடனக் குழு குதித்துக் கொண்டும் ஒலி பெருக்கி அலறிக் கொண்டும் இருந்தமையால் கொஞ்சம் செவிக்குத் தொல்லை!

அடுத்ததாக பேய் குகை! பெயரக் கேட்டாலே சும்மா டெர்ரரா இருக்கா?
அந்த குகையில் விசேஷம் என்னனா இருட்டான அவ்வப்போது எரிந்து எரிந்து அணையும் விளக்குகளுடன், ஒரு குரல் " ஹெல்லோ பேயீயீயீ" என்று கேட்கும்... பின் சிறிது தூரம் சென்றதும் மற்றொரு குரல் கத்தும் கொலவெறியோட... நம்ம பயந்து கத்துறது இல்லனு அவங்களே கத்திக்கிறாங்க போல :))) ஏன்னா முதலில் எனக்கு சிரிப்பா தான் இருந்தது! :))))

இந்த குகை அங்கங்கே வளைந்து வளைந்து செல்லும்... ஒரு வளைவில் தான் ஒரு பயங்கரம் (அ) நகைச்சுவை! பொழிலன் ஒரு தைரியசாலி... ஒரு குட்டி மனிதன் பேய் வேடம் போட்டு ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருக்க நான் திரும்பியதும் அதைப் பார்த்து கொஞ்சம் பயந்தேன்... பொழிலன் அதைக் கண்டுகொள்ளவில்லை... ஆனால் அது திடீர்னு கையை தூக்கி ஆட்டுச்சு பாருங்க...

"ஆஆஆஆ அம்மா அம்மா!" இது நான்.... "ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி!" இது பொழிலன்! அவனுக்கோ பேயைப் பார்த்து ஒரே சிரிப்பு... எனக்கோ பயம்...
அந்த பேய் வேடம் வெளியே வெளிச்சத்தில் சிரிப்பாக இருந்தாலும் உள்ளே கொஞ்சம் பயமாதான் இருந்துச்சு!

பிறகு வெளியே வந்து டோராவின் புதிர் வீட்டிற்கு சென்று வந்தோம்... வெளியே வந்தால் அதே பேய் மனிதன்... நாங்களும் சென்று பேசினோம் ஆனாலும் கை குலுக்க கொஞ்சம் பயம்... அது கையை புகைப்படத்தில் பாருங்களேன்.... பொழிலன் தான் அதோடு மறுபடியும் சிரித்து அது கையைப் பிடித்து நகங்களைத் தடவிப் பார்த்து மீண்டும் சிரிப்பு! :))) இளம் கன்று பயம் அறியாது!

ஒரு வழியாக பொழிலனுக்கு நல்ல மகிழ்ச்சியான தருணங்களாவே இருந்தது இன்று! :)))))

19 comments:

jothi said...

//ஒரு வழியாக பொழிலனுக்கு நல்ல மகிழ்ச்சியான தருணங்களாவே இருந்தது இன்று! :))))) //

அதுதானே வேண்டும்??

4 மாத பொழிலன் படம் சூப்பர். கொள்ளை அழகு. சுத்திப் போடுங்கள்.

ஆகாய நதி said...

வாங்க ஜோதி! :)

எங்கே பார்த்தீங்க பொழிலனின் 4வது மாத புகைப் படத்தை??!!

வைகரைதென்றல் (vaigaraithenral ) said...

மிக அருமை :)))))))

///திடீர்னு கையை தூக்கி ஆட்டுச்சு பாருங்க...
"ஆஆஆஆ அம்மா அம்மா!" இது நான்.... "ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி///

:)))))
கலக்குங்க:)

ஆகாய நதி said...

வாங்க வைகரைதென்றல்... மிக்க நன்றி! :)

jothi said...

ஐயய்யோ,.. அப்ப MYBOY IS A JOYnnu போட்டு ஒரு குழந்தை படம் இருக்கே,. அது யாரு? அதைதான் சொன்னேன்,..

ஆகாய நதி said...

ஓஓ அந்தப் படமா? :) ஆமாம் அது பொழிலன் தான் :) மிகச் சரியா 4மாதம்னு சொன்னீங்களே அதான் கேட்டேன் :)

லக்கிலுக் said...

துட்டு நிறைய வாங்குவார்களே? வாங்குகிற துட்டுக்கு ஒர்த்தா?

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதுமாதிரி தான் விளம்பரப்படுத்தினார்கள். ஐம்பது ரூபாய் கொடுத்து உள்ளே நுழைந்தால் செண்ட்ரலைஸ்டு ஏசியை போட்டுவிட்டு தெர்மாகூலை தூவி கடுப்பேத்திவிட்டார்கள் :-)

jothi said...

// அது பொழிலன் தான் :)//

ம்ம்க்கும்,.. இருந்தாலும் உங்களுக்கு நக்கல்தான்,.. உங்ககிட்ட ஜாக்கிரதையா பேசணும்,..

ஆகாய நதி said...

வாங்க புது பொறுப்பான அப்பா லக்கி சார்... :)

//
துட்டு நிறைய வாங்குவார்களே? வாங்குகிற துட்டுக்கு ஒர்த்தா
//

30ரூபாய் நுழைவிற்கும் 50ரூபாய் பனி அருவிக்கு என தனியேவும் கொடுத்தோம் நான் சொல்வது தலை ஒன்றுக்கு...

பரவாயில்லை... நல்ல முயற்சி தான் எங்கள் மேல் ஒரு சுவற்றில் இணைக்கப் பட்ட ரோலரை வைத்து பெரிய பனிக்கட்டி உடைக்கப் பட்டு தூவப்பட்டது... பனி மழை போல் விழுந்தது எங்கள் மேல் :) அவ்வளவு தான்... தரையெல்லாம் பனிக்கட்டி, சறுக்கு விளையாடு தளமும் பனிக்கட்டி!

ஆகாய நதி said...

//
நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதுமாதிரி தான் விளம்பரப்படுத்தினார்கள். ஐம்பது ரூபாய் கொடுத்து உள்ளே நுழைந்தால் செண்ட்ரலைஸ்டு ஏசியை போட்டுவிட்டு தெர்மாகூலை தூவி கடுப்பேத்திவிட்டார்கள் :-)
//

அடக் கடவுளே! :( இதை நம்ம ஆபிஸ்லயே நாம செய்துக்கலாம் :)

பாவம் தான் நீங்க...

ஆகாய நதி said...

ஹி ஹி ஹி! நக்கல் எல்லாம் இல்லை ஜோதி... :))))))))

//
உங்ககிட்ட ஜாக்கிரதையா பேசணும்,..
//

அது நெசந்தான் :)

வித்யா said...

பொழிலன் நல்லா எண்ஜாய் பண்ணிருக்காரு:)

ஆகாய நதி said...

ஆமாம் வித்யா! :) நன்றி!

சந்தனமுல்லை said...

ஆகா..மே மாதத்தில் பனிப்பொழிவை பரிசளித்தீர்களா..பொழிலுக்கு! ஆகாயநதி பயந்தசுபாவம்னு நாங்க நம்பிட்டோம்! ;-)

ஆகாய நதி said...

வாங்க முல்லை...

//
ஆகா..மே மாதத்தில் பனிப்பொழிவை பரிசளித்தீர்களா
//

அதை ஏன் கேக்குறீங்க... அவன் தலையில பனித் துளி தெரிச்சுடக் கூடாதுனு அவனை எனக்குள்ள ஒளிச்சு வைச்சு வேகமா வலுக்கும் பனிக்க்கட்டித் தரையில நடந்து வெளியே வந்துட்டேன்... அப்புறம் அவனை ஒருத்தர் வைச்சுக்க மத்தவங்க போயி நனையுறதுனு கலாட்டா பண்ணினோம் :)))

ஆகாய நதி said...

அப்போ கூட முல்லை அவனுக்கு அவன் மேல பட்ட பனிக்கட்டி தூள் பார்த்து ரொம்ப குஷியாகிட்டான்...

ஒரே சிரிப்பு... ஜில்லுனு பட்டது அவனுக்கு ரொம்ப புடிச்சு போச்சு போல :))

ஆகாய நதி said...

//
ஆகாயநதி பயந்தசுபாவம்னு நாங்க நம்பிட்டோம்! ;-)
//

ஏங்க...?
நான் பயப்படாத ஆனால் கொஞ்சம் பயந்த சுபாவம்... :)))

ராம்.CM said...

பொழிலன் கொடுத்துவைத்தவன்.....

ஆகாய நதி said...

நன்றி ராம் சார் :)

பொழிலனை பெற நாங்கள் தான் கொடுத்துவைத்திருக்கிறோம் :)))

கடவுளுக்கு எத்துணை நன்றிகள் கூறினாலும் போதாது! :)