May 9, 2009

பிரசவத்திற்கு பின்!

"பிரசவ காலம் மற்றும் பயனுள்ள தகவல்கள்"


என்ற எனது பதிவு அம்மாக்கள் வலைப்பூவில் உள்ளது!
இதன் தொடர்ச்சியாக இந்தப் பதிவு!

பொதுவாக நார்மல் டெலிவெரி மூலம் குழந்தைப் பெற்றவர்கள் செய்ய வேண்டியது பற்றி எனக்கு முழுமையாக தெரியாது;ஆனால் ஓரளவு எனக்குத் தெரிந்தவற்றை கூறுகிறேன்...

நார்மல் டெலிவெரி தாய்மார்கள் கவனத்திற்கு:

* குழந்தை பிறந்ததும் சில மணி நேரங்களில் தூக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்து கொள்ளும் அளவுக்கு உங்களுக்கு உடல் தெம்பு இருக்கும்;

* ஆனால் சிலருக்கு சில குறைபாடுகள் காரணமாக உடல் வ்லுவின்றி எழுந்திருக்க முடியாது, அதனால் பரவாயில்லை உங்களுக்கு முடியும் போது எழுந்து கொள்ளலாம்;

* நீங்கள் முக்கியமாக படுத்திருக்கும் போது உங்கள் கால்களை ஒடுக்கி வைத்தே உறங்க வேண்டும்;

*டெலிவெரி முடிந்து வீட்டிற்கு வந்ததும் எவ்வளவு சூடு உடல் தாங்குமோ அவ்வளவு சூடு உள்ள தண்ணீரை வைத்து குளிப்பதோடு அல்லாமல் உங்கள் வயிற்றிலும் நன்கு வேகமாக ஊற்ற வேண்டும்; இது தொங்கும் வயிற்றை குறைப்பதற்காக; :)

* நன்கு நடைபயிற்சி செய்தல் அவசியம்; அப்போது தான் எடை பழையபடி வரும்; வயிறும் குறையும்;

*இப்போது நீங்கள் பெல்ட் (அ) காட்டன் துணி கொண்டு உங்கள் வயிற்றை இறுகக் கட்டிக்கொள்ளுங்கள்; இது உங்கள் வயிற்றை பழைய அளவிற்கு இறுக்க உதவும்;

*இப்போது நீங்கள் வயிற்றைக் குறைப்பதற்காக உங்கள் மருத்துவர் கூறும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்

* உணவுக் கட்டுப்பாடு கூடவே கூடாது

*பத்திய உணவு என்று சமைத்துக் கொடுப்பார்கள்; தயவு செய்து சுவை பிடித்தாலும் பிடிக்காவிடினும் அதனை உண்ணுவதே சிறந்தது உங்கள் உடல் நிலைக்கும் உங்கள் குட்டிப் பாப்பாவுக்கும்;

சிசேரியன் டெலிவெரி தாய்மார்கள் கவனத்திற்கு:

* நீங்கள் மூன்று நாட்களில் நடக்கத் துவங்கலாம்

*நீங்கள் டெலிவெரி முடிந்து வீட்டிற்கு வந்ததும் எவ்வளவு சூடு உடல் தாங்குமோ அவ்வளவு சூடு உள்ள தண்ணீரை வைத்து குளிப்பதோடு அல்லாமல் உங்கள் வயிற்றிலும் மெதுவாக ஊற்ற வேண்டும்; இது தொங்கும் வயிற்றை குறைப்பதற்காக; :)

* ஒவ்வொரு முறை குளித்தப் பின்பும் தையல் போட்ட இடத்துல் நீர் இல்லாமல் பார்த்து ஒற்றி எடுக்க வேண்டும்; துடைக்கக் கூடாது அவ்விடத்தில்;

* உங்களுக்கு அதிகம் பத்திய உணவு தேவை இல்லை; ஆனால் காரம் மற்றும் புளிப்பு, ஒவ்வாமை குணம் உள்ள உணவு கூடவே கூடாது;

* நீங்கள் உங்கள் வயிற்றை மருத்தவர் ஆலோசனைப் படி இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பிறகு பெல்ட் அல்லது துணி மூலம் கட்டலாம்। ஆயினும் முழுமையாக வயிறு ஒட்டுமா என உறுதியளிக்க இயலாது :(

*நீங்கள் மல்லாந்துப் ப்டுத்தவாக்கில் எழுந்திருக்கக் கூடாது; குப்புற படுப்பதும் கூடாது;

* அதிக எடை தூக்குதல், வேகமாக நடத்தல், அதிக அளவு வேலை செய்தல் கூடவே கூடாது 8மாதங்களுக்கு;

*சளிப் பிடிக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம்;

பொதுவாக இரு வகையினரும் செய்ய வேண்டியது:

* குளிர் பானங்கள், செயற்கை உணவுப் பொருள், கடை உணவு, குளிர்ந்த நீர், அதிக காரம், அதிக புளிப்பு, சிக்கன் மற்றும் அதிக சூடு தரும் பொருட்கள் போன்றவற்றைத் தவிர்த்திடுங்கள்;

*ஈரத் தலையுடன் அதிக நேரம் இருக்காமல் விரைவில் உலர்த்திடுங்கள்;

*உங்கள் உடல் சூடு குழந்தைக்குக் கண்டிப்பாக அவசியம் ஆதலால் குழந்தை உங்கள் அருகாமையிலேயே இருக்க வேண்டும்; உங்களுடன் உங்கள் அருகிலேயே தூங்க வேண்டும்;

* அதிகம் தண்னீர் மற்றும் பால், மீன், கீரை, பச்சைக்காய்கறிகள், திராட்சை,
பலா, மா தவிர்த்து அனைத்து விதமான பழங்கள் போன்றவற்றை அத்தியாவசிய உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்;

*பால் குறையும் சமயம் ரஸ்க், பிரட், பீன்ஸ், கோதுமை உணவு, ஓட்ஸ் கஞ்சி, பால், தண்ணீர், மீன், தயிர் சாதம் போன்றவை உடனடியாகப் பால் சுரக்க உதவும்;

* கஸ்தூரி மஞ்சள் வயிற்றில் உள்ள கோடுகளை நீக்க உதவும்; ஆனால் சிசேரியன் செய்தவர்கள் வெளிப்புற புண் ஆறியது இதனை உபயோகிக்கலாம்;

*குழந்தைக்குப் பால் கொடுக்கும் வரை கர்ப்பம் தரித்தல் கூடவே கூடாது; சிலர் பால் கொடுக்கும் போது கர்ப்பம் தரிக்காது என்று தவறாக நினைக்கிறார்கள்; அப்படியெல்லாம் இல்லை, எனக்குத் தெரிந்த ஒருவருக்கு கையில் 5மாதம் வயிற்றில் மூன்று மாதம் :(

*குழந்தை வெகு நேரம் பால் குடிக்காமல் இருந்தால் சேர்ந்திருக்கும் பாலை எடுத்துவிடுவது நல்லது;

* அதிக இரும்புச் சத்து, கால்சியம் நிறைந்த உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும்;

* முக்கியமானது என்னவென்றால் இப்போது உங்கள் குழந்தை மட்டுமல்ல நீங்களும் புதிதாகப் பிறந்திருக்கிறீர்கள்; ஆதலால் உங்கள் உடலுக்கு நல்ல ஊட்டச் சத்து நிறைந்த உணவு மூலம் வலு சேர்க்க வேண்டும்;

*அதிக அளவு காய்கறி சூப், மட்டன் சூப், ஈரல், முட்டை, பூண்டு சேர்த்துக் கொள்ள வேண்டும்;

இப்படியெல்லாம் நம்மை நாமே பார்த்துக்கொண்டால் வயதானாலும் தெம்புடன் இருக்கலாம்; பிரசவத்திற்கு பின் உடல் நிலையை கவனிக்கவில்லை எனில் பிற்காலத்தில் பாதிப்பு.

இதில் ஏதேனும் விட்டுப் போயிருந்தால் பின்னூட்டத்தில் கூறுங்கள்; இதில் தாய்மார்களுக்கான குறிப்புகள் மட்டுமே கொடுத்துள்ளேன்!

வாய்ப்பிற்கு நன்றி முல்லை மற்றும் வீணாவிற்கு! :)

18 comments:

Deepa said...

Super! சொன்ன அத்தனையுமே புதிய தாய்மார்களுக்கு ரொம்பவும் அத்தியாவசியமான குறிப்புக்கள்.
பாராட்டுக்கள்.

jothi said...

மிக நன்றாக சொல்லி இருக்கீர்கள்.(மாமியாரை விட்டு தள்ளி உள்ள பெண்கள்(இப்போ நிறைய பேர் இப்படித்தான்), அம்மாவிடம் இல்லாத பெண்கள், அம்மாவாகப் போகின்ற பெண்கள் என எல்லோருக்கும் பயனுள்ள தகவல்,.. (ச்ச,. அம்மாவாக முடியாதது எவ்வளவு பெரிய கொடுமை???)

// எனக்குத் தெரிந்த ஒருவருக்கு கையில் 5மாதம் வயிற்றில் மூன்று மாதம் :( //

Painful Joke,..மக்கள் தொகையை எங்கே குறைக்கிறது??

Archana said...

good post. thank you.

ஆகாய நதி said...

நன்றி தீபா! :)

ஆகாய நதி said...

நன்றி ஜோதி! :)

//
(ச்ச,. அம்மாவாக முடியாதது எவ்வளவு பெரிய கொடுமை???)
//

அதையும் பாஸிட்டிவாக எடுத்துக் கொள்வோமே! அப்போதுதான் மனம் வருந்தும் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க முடியும்... அது மட்டுமல்லாமல் அது உண்மையும் கூட... அதாவது ஒரு பெண் பிறந்தது முதலே ஏதாவது ஒரு வகையில் தாய் கதாப்பாத்திரம் ஏற்கிறாள்! பெற்றால்தான் தாய்மை என்றில்லை!

என்ன நான் கூறுவது? :)

ஆகாய நதி said...

//

// எனக்குத் தெரிந்த ஒருவருக்கு கையில் 5மாதம் வயிற்றில் மூன்று மாதம் :( //

Painful Joke,..மக்கள் தொகையை எங்கே குறைக்கிறது??
//

உண்மைதான் :(

ஆகாய நதி said...

நன்றி அர்ச்சனா! :)

வீணா said...

Very Nice and usefull.. Keep writing.:-)

jothi said...

// அதாவது ஒரு பெண் பிறந்தது முதலே ஏதாவது ஒரு வகையில் தாய் கதாப்பாத்திரம் ஏற்கிறாள்! //

ரொம்ப சரி.

ஆகாய நதி said...

நன்றி வீணா! :)

ஆகாய நதி said...

நன்றி ஜோதி! :)

வீணா said...

தேன் மற்றும் ஜின்ஜர் கூட பிரசவத்திற்கு பின் நம் உடல் உறுதி பெற உதவும்.

ஆகாய நதி said...

நன்றி வீணா! :)
இரும்பு சத்து என்றதுமே நினைவில் வருவது தேன் தான்.. அதனால் தான் நான் தேன் பற்றி தனியாகக் கூறவில்லை மன்னிக்கவும் :)

Anonymous said...

i heard tying the stomach with cloth or wearing belt is not good,doing exercise is better,can u confirm .

Anonymous said...

yavarum soluvathu ok. aanal thoppai kuraiyavae matten yenkirathu? exercise panna mudivathilai. dieting and walking follow pannaren. pls suggest me - CSR

ஆகாய நதி said...

நீங்கள் கூறுவது உண்மை தான்.... ஆனால் நீங்கள் இயற்கை பிரசவமா அல்லது சிசேரியனா என்பதைக் கூறவில்லையே...

டயட் என்று சாதாரணமாக நாம் கடைபிடிப்பது உண்மையில் எடை குறைவதற்கு உதவாது... கடுமையான உணவுக்கட்டுப்பாடும், கடுமையான உடற்பயிற்ச்சியும் மட்டுமே எடை குறைய உதவும்...

இது என் அனுபவத்தில் கூறுகிறேன்... சர்க்கரை, கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகளை நீக்கிவிட்டு, புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச் சத்து, ஒமேகா-3 சத்து நிறைந்த உணவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்....


காலையில் சத்து நிறைந்த பழங்கள், நார்ச்சத்து நிறைந்த உணவு என்று சரிவிகித உணவும், பின் மதிய உணவிற்கு சில மணி நேரம் முன்பாக சூப், பின் குறைவான அரிசி உணவு அதிக அளவு காய், பருப்பு, தானியங்கள் என்று சமைத்த உணவு வயிறு முட்ட உண்ணாமல் ஓரளவு வயிறு நிறைய உண்ண வேண்டும்...


பின் 3மணி நேர இடைவேளைக்குப் பிறகு பழம் அல்லது பழச்சாறு சர்க்கரை இல்லாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும்...

பின் ஏதாவது சுண்டல் அல்லது ஓட்ஸ் அல்லது கோதுமை பிரட் இப்படி ஏதாவது மாலை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ள வேண்டும்...

இரவு படுக்கச் செல்வதற்கு குறைந்தபட்சம் 2மணி நேரத்திற்கு முன் கேழ்வரகு அல்லது கோதுமையில் செய்த எந்த உணவாவது எடுத்துக்கொள்ள வேண்டும்...


இதனுடன் தினமும் 30நிமிட உடற்பயிற்சி மற்றும் 10நிமிட நடை பயிற்சி அல்லது யோகா செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்...

உடற்பயிற்சி இன்றி டயட் நிச்சயம் உதவாது இதுவும் என் அனுபவமே :(

நான் எல்லாம் சரியாகச் செய்யும் போது எடை குறையும் மீண்டும் சோம்பேறித் தனமாக உடற்பயிற்சி இன்றி காலம் கழிப்பேன் அவ்வளவு தான் 3மாதங்கள் முயன்று குறைத்த எடையை 3நாட்களில் கூட்டிவிடுவேன் :(

சிசேரியனாக இருந்தால் வயிறு முழுமையாக சமதளமாகாது... அது உங்கள் தையலைப் பொறுத்தது.... இயற்கைப் பிரசவம் என்றால் நிச்சயமாக சமதளமான வயிறைக் கொண்டுவரலாம் :)

ஆனால் சிசேரியனுக்கும் வெளியே தொப்பை அதிகம் தெரியாமல் வயிற்றைக் குறைக்க முடியும்.... கடுமையாக முயற்ச்சிக்க வேண்டும்... ஆனால் சில பயிற்ச்சிகள் நமக்கு செய்யக் கூடாது... அவற்றை அறிந்து சரியான பயிற்சியினை தொடர்ந்து செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்...

(செயற்கை உணவு, குளிர்பானம் மற்றும் வறுவல் போன்ற எண்ணைப் பொருட்கள், சர்க்கரை உள்ள சாக்கலேட், ஐஸ் கிரீம் வேண்டவே வேண்டாம்)

gopala said...

hello friend
after delivery what kind of food should take .sisaeriyan only .kind of food and friuts.

gopala said...

hello friend
after delivery what kind of food should take.
sisaeriyan only
types of veg and non veg and friuts.