இப்போது பொழில் குட்டிக்கு நன்றாக பொருட்களையும் உறவுகளையும் அடையாளம் காணத் தெரிகிறது :))
தம்பி ball எங்கேனு கேட்டா அவனுடை காத்தைடைக்கும் பந்துகளைக் காட்டி "அம்மா அதோ அந்தோ"னு பதில் கூறுவான்... அந்த பிஞ்சுக் கைகள் அவற்றை சுட்டிக் காட்டியபடி இருக்கும் அழகே தனி அழகு! :)
காகா, மாடு, பஸ், கார், பைக் இவற்றைப் பார்த்தாலே நான் எதுவும் கேட்காவிட்டாலும் கூட "அம்மா அம்மா அதோ அந்தோ!"னு எனக்கு காட்டுவான்! நான் அவனுக்குக் காட்டிய காலம் போயி என் பிள்ளை எனக்குக் காட்டுகிறான்! :)
நாங்கள் எங்கு சென்றாலும் பார்க்கும் அத்தனை பற்றியும் அவனுக்குக் கூறிக் கொண்டே வருவேன்... அதனால் இப்போது அவனும் ஓரளவிற்கு அனைத்தையும் அடையாளம் காண்கிறான் :)
எதிர் வீட்டில் ஒரு குட்டி பாப்பா... அவளை என் அம்மா தூக்கக்கூடாதாம் பொழிலனை மட்டும் தான் தூக்க வேண்டுமாம்... அவளை அம்மா தூக்கினாலே "ஆச்ச்ச்ச்ச்சிசிசி வா வா"னு ஒரே மிரட்டல் கலந்த அழுகை! :)
அவனுடைய விளையாட்டு பொம்மைகளுக்கு பெயர் வைத்திருக்கிறேன்... அந்த பெயர் பொம்மை எங்கே என்றால் அதனையும் அழகாக அவன் பாணியில் காட்டுவான் :)
நிலா எங்கே என்றால் மேலே பார்த்துக் கொண்டிருந்தவன் இப்போது அவன் மேலே பார்க்கும் திசையில் நிலா இல்லையென்றால் "அம்மா ம்ம்ம்"னு மேலே கை காட்டி சிணுங்குகிறான்... இன்னும் பெரியவனானால் "அழாதேடா கண்ணு நீ நிலாவுக்கே போயி பார்த்துட்டு வா பெரியவனானதும்"னு சொல்லிடுவேன் :)
என்னுடைய பொருட்களை யார் தொட்டாலும் எனக்குப் பிடிக்காது அப்படியே அனாவசியமாக என்னைத் தொட்டு பேசுவதும் எனக்குப் பிடிக்காது... "தாயைப் போல் பிள்ளை" என்பது பொழிலனுக்கு நன்கு பொருந்துகிறது இந்த விஷயத்தில்! யாராவது கொஞ்சி பேசினால் பதில் சிரிப்பு, அரைகுறை பேச்சு, என்று எல்லாமும் உண்டு ஆனால் அவனைத் தொடாத வரை... அவனைத் தொட்டாலோ போச்சு... ஏய் ஆ ஆ! னு மிரட்டிடுவான்!
அதே போல அவனுடைய பாட்டில், பொம்மை அனைத்தையும் புதிய நபர் யாராவது தொட்டால் கோபம் வருகிறது அவனுக்கு... உடனே அதனை அவர்களிடம் இருந்து வாங்கிவிடுவான்!
இது நல்ல பழக்கம் என்றே நினைக்கிறேன்... தன்னையும், தன் உடைமைகளையும் புதியவர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளுதல் நல்ல பழக்கம் தானே! :)
அவனுக்கு பேச்சு, நடை, பொருட்களின் பெயர், நடனம், ரைம்ஸ் பாடுதல் என நிறைய கற்றுக் கொடுத்து நன்றாக நேரம் செல்கிறது! அவனுக்காக நான் செலவிடும் அன்பும், நேரமும் கணக்கில்லாதவையாகவே இருக்கவேண்டும் என்பது என் பிறவி ஆசை! :)
வணக்கம்
1 week ago
6 comments:
//தம்பி ball எங்கேனு கேட்டா//
தம்பியா???? (பி.கு. எங்கள் வீட்டிலும் அப்படி கூப்பிடுவதுதான் வழக்கம், ஆனால் சென்னையில் எல்லோரும் கிண்டலடிப்பார்கள்)
//அவனுக்காக நான் செலவிடும் அன்பும், நேரமும் கணக்கில்லாதவையாகவே இருக்கவேண்டும் என்பது என் பிறவி ஆசை! :) //
உங்களுக்காகவும் பொழிலனுக்காகவும் அல்லும் பகலும் உழைக்கும் உங்கள் அப்பிராணி வீட்டுக்காரரையும் கண்டுகொள்ளுங்கள் (ஒரு ஆம்பிள்ளையின் ஒரு ஆம்பிளைக்குதான் தெரியும்!!!).
வாங்க ஜோதி! ஒரு செல்லத்துக்கு தான் தம்பி என்று ஆண் குழந்தையையும் பாப்பா என்று பெண் குழந்தையையும் அழைக்கிறோம்... :))))
பொழிலனை இன்னும் பல பெயர்களில் அழைப்பேன்... வயிற்றில் இருக்கும் போதே செல்லக்குட்டி என்ற பெயர்... பின் குட்டிமா, கண்ணுமா, பட்டுமா, என பல பல...
இதற்கு ஒரு பாடலே வைத்திருக்கிறேன்... என்னுடையபழைய பதிவுகளைப் பார்த்தால் தெரியும் :)
உங்கள் குழந்தையின் பெயர் என்ன?
//
உங்களுக்காகவும் பொழிலனுக்காகவும் அல்லும் பகலும் உழைக்கும் உங்கள் அப்பிராணி வீட்டுக்காரரையும் கண்டுகொள்ளுங்கள்
//
அய்யோ என்ன இப்படி சொல்லிட்டீங்க... பொழிலனுக்கானது கணக்கில்லாத நேரம்னா, அவங்களுடைய நினைவு இல்லாத நொடியே கிடையாது... பொழிலனும், பொழிலன் அப்பாவும் எனக்கு இரு கண்கள்! :)))
ஆனந்தகண்ணன். ஜுன் வந்தால் இரண்டு வயதாக போகிறது.
அழகான பெயர் :) ஆனந்த கண்ணன் பிறந்த நாளுக்கு முன்னதாகவே என்னுடைய வாழ்த்துகள்! :)
Post a Comment